ஆன்மீகம் என்பது தலைமுறைகளாக தேடக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. எனவே இதன் அவசியம் எல்லா காலங்களிலும் உள்ளது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்கையில், நின்று நிதானிக்க, ஆழ் மனதை அமைதிப் படுத்திக் கொள்ள நமக்கு ஆன்மீகம் தேவையாக உள்ளது. எனினும் நீங்கள் அப்படியே உட்கார்ந்து உங்கள் மனதில் உள்ளதையும், வாழ்வில் நடந்ததையும் ஆன்மீக புத்தகத்தில் எழுத முடியாது. ஆன்மீகத்தில் நம்பிக்கையும், உலகத்தையும் மற்றும் கடவுள் மேல் அல்லது குறிப்பிட்ட கடவுளைப் பற்றியும் எழுத வேண்டும். ஆன்மீகத்தில் நமது சொந்த அனுபவத்தை விடவும் நிறைய உள்ளது. நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் வேறுபட்டவன், அதிலும் ஆழ்மனம் சார்ந்த விஷயங்களில். நீங்கள் சென்ற வழி உங்களுக்கு ஆழ் மன அமைதியைப் பெற உதவியது என்றால், மற்றவருக்கும் உதவும் என்று அவசியம் அல்ல. முக்கியமாக நீங்கள் எழுதும் ஆன்மீக புத்தகம் படிப்பவரின் ஆன்மீக தேவையை நிறைவு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.
1. உங்கள் பாதையைத் தேர்வு செய்யுங்கள்:
ஒரு ஆன்மீகப் புத்தகம் எழுதுகிறீர்கள் என்றால், நீங்கள் அதன் மூலம் அனுபவித்து உணர்ந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களது புத்தகத்தில் ஏதேனும் ஒரு வழிமுறயை பின்பற்றி எழுதுங்கள், பொதுவாக வாசகர்கள் ஆன்மீக அமைதி பெற ஏதேனும் ஒரு வழிமுறையைக் கொண்ட புத்தகத்தையே வாங்க விரும்புவார்கள். பொதுவான கருத்து கொண்டதை அல்ல.
2. உங்கள் அனுபவத்தை பகிருங்கள்:
உங்கள் வாழ்க்கைக் கதையைக் கூருங்கள். உங்கள் ஆன்மீகப் பயனத்திற்கான காரணத்தினை கூறுங்கள். அது மரணத்திற்கினையானதாக இருந்ததா அல்லது ஆன்மீகப் பாதையில் பயனிப்பது எவ்வித உணர்வைத் தந்தது என்பதைக் கூறுங்கள். அறுமையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுங்கள். உங்கள் கதையை கூறுவதாக மட்டும் இருக்கக் கூடாது, படிப்பவரின் மனதில் பதிந்து அவரின் மனதை ஆன்மீக வழியில் கொண்டு செல்லக் கூடிய ஆழமான மற்றும் சிறந்த வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டும். நீங்கள் ஒரு ஆன்மீக சிந்தனையாளராக இருப்பதை விட ஒரு ஆன்மீக குருவாக இருக்க வேண்டும், நீங்கள் உங்கள் வாசகர்களை ஆன்மீக வழியில் கொண்டு செல்பவராக இருக்க வேண்டும் மாறாக அவர்களிடம் உங்களது கருத்தைத்தையோ அல்லது உணர்ச்சி பூர்வமான கோட்பாடுகளையோ அவர்கள் மேல் திணிக்காதீர்கள், அது அவர்களை ஆன்மீக வழியில் இருந்து விலகிச் செல்ல வைத்து விடும்.
3. உங்கள் நம்பிக்கையை உணர்த்துங்கள்:
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பிறகு, அதனை நீங்கள் ஆழமாக விளக்கிக் கூற வேண்டும். உங்கள் ஆன்மீக பயனமும், நிகழ்ச்சிகள், அதன் மூலம் கிடைத்த அனுபவம், அதனால் கிடைத்த தெளிவு இவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
4. அனுபவ ரீதியான உண்மையைக் கூறுங்கள்:
உங்கள் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள், அதன் மூலம் ஏற்பட்ட மனக் குழப்பங்கள், அதன் விளைவுகள், மற்றும் உங்கள் மன நிலை குறித்து எழுதுங்கள். இது வாசகர்களுக்கு தங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வு போல உணரச் செய்யும். படிப்பவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
5. வாசகர்களைச் சந்தியுங்கள்:
உங்கள் புத்தகத்தை ப்ரசுரியுங்கள். ஆன்மீக புத்தகங்களை பிரசுரிப்பவர்களிடம் சென்று பிரசுரியுங்கள். இது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், நமது படைப்புக்கும், பிரசுரிப்பவரின் எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தாமல் போகலாம். நீங்கள் தனியாகவே உங்கள் புத்தகத்தைப் பிரசுரிக்கலாம். இவ்வித படைப்புகளில் அங்கீகாரம் கிடைக சிறிது காத்திருக்க வேண்டி வரலாம். பொறுமையுடன் காத்திருங்கள். சிறந்த விற்பனை முறையையும், விற்பனைத் தந்திரத்தையும் பயன் படுத்துங்கள். உங்கள் புத்தகங்களுக்கு அங்கீகாரம் பெறுங்கள்.
Image credit: Alice Popkorn on flickr and reproduced under Creative Commons 2.0[author] [author_image timthumb=’on’]https://writingtipsoasis.com/wp-content/uploads/2014/12/photo.jpg[/author_image] [author_info]Georgina Roy wants to live in a world filled with magic.
As a 22-year-old art student, she’s moonlighting as a writer and is content to fill notebooks and sketchbooks with magical creatures and amazing new worlds. When she is not at school, or scribbling away in a notebook, you can usually find her curled up, reading a good urban fantasy novel, or writing on her laptop, trying to create her own.
[/author_info] [/author]