• Skip to main content
  • Skip to primary sidebar
  • Guides
  • Publishing
  • Writing & Editing
  • Marketing
  • Contact
  • About
  • Free Novel Writing Course
  • Advertise
Writing Tips Oasis

Writing Tips Oasis

ஒரு எழுத்தாளராக உங்களுக்கு ஈகோ இருக்கிறதா என்று சரிபார்பது எப்படி?

By Shweta Mishra


ஒரு எழுத்தாளராக உங்களுக்கு ஈகோ இருக்கிறதா என்று சரிபார்பது எப்படி?

எழுதுவது என்பது ஒரு கலை; எழுத்தாளர் ஒரு கலைஞர். அனைத்து கலைத்துரையைச் சேர்ந்தவர்களும் தனிமையை விரும்புவார்கள், எல்லா நேரங்களிலும் இல்லாவிட்டலும், முக்கியமாக தங்களின் கலைப்பணியைச் செய்யும் பொழுது தனிமையை விரும்புவார்கள். இதில் இரண்டு உபயோகங்கள் உள்ளன. ஒன்று வேலையை கவனத்துடன் செய்ய முடிகின்றது, மற்றொன்று மனதில் புதிய மற்றும் அரிய எண்ணங்கள் தோன்றுவதற்க்கு உதவுகின்றது. அனைத்து உதவுகின்றது. அனைத்து எழுத்தாளர்களும் அவர்களின் செயல்முறைகளும் ஒன்றே. ஒரு எழுதாளர் தினமும் வெவ்வேறு துரைகளிலும், வெவ்வேறு தலைப்புகளிளும் எழுதவேண்டும். இதற்காக அவர்கள் தினமும் கடும் உழைப்பும், சிந்திக்க அமைதியான சூழலில் அதிக நேரமும் செலவிட வேண்டி இருக்கும்.

ஆரோக்யத்திற்க்கு சில குறிப்புகள்:

அனைவரும் அவரவர்களை நேசிக்க வேண்டும். ஆரோக்யமான வாழ்விற்க்கும், நேர்மறை எண்ணங்கள் வருவதற்க்கும் அவசியமாக இருக்கின்றது. ஆனால் ஒருவர் தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் தன்னைத் தானே அதிகமாக நேசிக்கத் துவங்கிவிடுவார்கள். இங்குதான் ஈகோ (தான் எனும் அகங்காரம்) பிறக்கிறது. ஈகோ என்பது லத்தினில் தான் என்று அர்த்தம். எப்பொழுது நீங்கள் தான் என்ற எண்ணம் கொண்டு நீங்கள் செய்யும் செயல்களை நேசிக்கின்றீர்களோ, அங்கே உங்கள் ஈகோ செயல்பட துவங்குகின்றது.

The following banner is an affiliate one. That means Writing Tips Oasis receive a small % of the sale if you purchase The Novel Factory, but at no extra cost to you:

ஒரு எழுத்தாளரான உங்களுக்கு அகங்காரம் நேர்மறையான மற்றும் எதிர்மறையான எண்ணங்களை விளைவிக்கின்றது. அகங்காரம் என்பது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு தேவை.

  • எப்பொழுதெல்லாம் நீங்கள் தொடர்ந்து நிராகறிக்கப்படுகிறீர்களோ அப்பொழுது,
  • நல்ல வேலை கிடைப்பதற்காக நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்ளும் பொழுது,

உங்கள் ஈகோவை அளவில் வைத்துக்கொள்ளுங்கள்:

உங்கள் ஈகோவை அளவாக பயன்படுத்த வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் அது உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கக் கூடாது. உங்களுக்கு உங்கள் ஈகோ உங்களை ஆக்ரமிப்பது போல் தோன்றினால் உடனுக்குடன் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் அறிகுறிகளாவது பின்வருமாறு,

  • உங்களுக்கு எல்லம் தெரிந்தது போல் எண்ணம் தோன்றுவது.
  • ஆரம்பிக்கு பொழுதே எல்லாம் புரிந்து விட்டது போன்ற எண்ணம்.
  • ஆராயும் நேரத்தை குறைத்துக் கொள்வத்து.

எழுதி முடித்த பின் அதை சரிபார்க்காமல் மேம்போக்காக விடுவது.

இன்னொரு நிலையும் உள்ளது, நீங்கள் எண்ணுவது அனைத்தும் சரியென்று தோன்றும், நீங்கள் ஒரு எழுதாளராக இருப்பதால் மிகக் கடின உழைப்பை கொடுத்திருப்பீர்கள், ஒரு படைப்பு என்பது, ஒரு மரம் வேரூன்றி வளர்வது போல் உங்கள் படப்பை மக்கள் அங்கீகாரம் செய்வதற்க்கு அரும்பாடு பட்டிருப்பீர்கள். மற்ற கலைஞர்களைப் போல நீங்களும் பெயரும், புகழும் பெற விருப்பப் படுவீர்கள். இதனால் உங்களின் சுய மரியாதை சுயநலமாக மாறாமலும், உங்கள் நம்பிக்கை அதிநம்பிக்கையாக மாறாமலும் பார்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் மாற்றத்தை உணரும் பொழுது உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள்.

நீங்கள் கவனித்துக் கொள்ள சிறு குறிப்புகள்:

  1. நீங்கள் எழுதும் பொழுது உங்கள் எழுத்தையும் நேசிது எழுதுங்கள், பலனை எதிர்பார்த்து எழுதாதீர்கள்.
  2. உங்களுக்குப் பெயரும், புகழும் கிடைக்கும் பொழுது, அது உங்கள் கடின உழைப்பின் பலன் என்று உணருங்கள், இதே போல் உழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
  3. நீங்கள் எழுத்தின் மீது கொண்ட விருப்பத்தால் எழுதுங்கள், மற்றவர்களுக்காக எழுதாதீர்கள்.

மீண்டும் மீண்டும் புதிய தகவல்களை மற்றும் கருத்துக்களை சேகரியுங்கள், நிறைய ஆராய்ந்து பின் உங்கள் பதிப்பை வெளியிடுங்கள்.

நீங்கள் ஒரு பதிப்பை முடித்துவிட்டீர்களானால் அதை திரும்பப் படித்து அதில் தோன்றும் மாற்றங்களைச் செய்து மெருகேற்றுங்கள். அது உங்களின் ஈகோவை கிழித்து, கடவுளாள் ஆசிர்வதிக்கப்பட்ட படைப்பாக உங்களை உணரச் செய்யும்.

Image credit: Mark Stuckert on flickr and reproduced under Creative Commons 2.0[author] [author_image timthumb=’on’]https://writingtipsoasis.com/wp-content/uploads/2014/03/Shweta-Pic.jpg[/author_image] [author_info]Shweta Mishra is a freelance writer with over 13 years experience. You can visit her website https://aainfotech.in to get to know more about her writing.[/author_info] [/author]

Filed Under: Uncategorized

Primary Sidebar

  • English

Copyright © 2023 · Writing Tips Oasis ® -- Terms and Conditions -- Privacy Policy