நல்ல மர்ம நாவல்கள் மற்ற சிறந்த நாவல்களைப் போல் படித்து முடித்த பின்பும் மனதில் ஆழமாக நினைவிருக்கும் சிறந்த கதாபாத்திரத்தைக் கொண்டிருக்கும், மற்றும் கதையில் ஒரு விருவிருப்பான மர்மத்தை கொண்டிருக்கும். அது ஒரு குற்றம் சம்பந்தப் பட்ட, முக்கியமாக கொலை சம்பந்தப் பட்டதாக இருக்கும். முக்கியமான கதை மர்மத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கதாநாயகனுக்கும், குற்றம் புரிந்தவனுக்கு இடயில் நடக்கும் சம்பவங்களுக்கும் இடையே பின்னப்பட்டிருக்கும். நல்ல நாவல்கள் எழுத சில முக்கிய கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.
1. கதையில் ஒரு புதிரை உருவாக்கவேண்டும்
உங்கள் வாசகர்களுக்கு கதானாயகனுக்குக் கொடுக்கும் வாய்ப்புகளையும், வ்யூகங்களையும் குற்றத்தை கதாநாயகனுக்கு முன்னால் கண்டறியும் வாய்ப்பினைக் கொடுங்கள். இது உங்கள் நாவலை படிக்கும் ஆர்வத்தை ஒரு விளையாட்டை விளையாட தோன்றும் ஆர்வம் போல் படிப்பவரைத் தூண்டும். எனினும், வ்யூகங்களை அளவாகக் கொடுக்கவும், திருப்பங்கள் அமைப்பதிலும் மிக கவனமாக இருக்க வேண்டும், இல்லையேல் கதையில் இருக்கும் ஸ்வாரஸ்யம் போய்விடும், படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும்.
2. கதாநாயகனைப் போன்ற உணர்வினை வாசகர்களுக்குக் கொடுங்கள்:
ஒரு மர்ம நாவலின் கதாநாயகன் என்பவன் குற்றத்தை கண்டுபிடிப்பவராக இருப்பார். எனவே கதாநாயகனை வடிவமைக்கும் பொழுது, அவரை அனுபவமிக்கவராக முன் கதைக் குறிபிலேயே குறிப்பிட வேண்டும். கதாநாயகனை சாதாரண மனிதனாக வடிவமைக்கும் பொழுது, அவருக்கு பல வித குற்றங்களை கண்டுபிடித்த அனுபவமுள்ளவராக காட்ட வேண்டும், இதனால் கதை இயல்பானதாகவும், உண்மைச் சம்பவம் போலவும் தோன்றும்.
3. மர்மத்தை தொடர்வது எப்படி:
உங்கள் கதாநாயகனுக்கு முடிந்த அளவு நேரமிண்மயை உருவாக்கவும், ஒரு புதிரை அவிழ்க்க முயலும் முன்பே அடுத்த அசம்பாவிதம் நிகழ்வது போல கதை அமைக்கவும், இது படிப்பவரின் ஆர்வத்தையும், கதையின் விருவிருப்பையும் கூட்டும். கதாபத்திரங்களுக்கு ஆழ்ந்த உணர்வுப்பூர்ணமான சம்பந்தங்களை உருவாக்கவும், குற்றவாளியின் பின் செல்ல கதாபாத்திரங்களுக்கு தக்க மறுக்க இயலாத காரணங்களை உருவாக்கவும்.
4. குற்றவாளிகளை அமைக்கும் விதம்:
குற்றவாளிகளைச் சித்தரிக்கும் பொழுது, அவர்களின் எண்ணம் செயல் எல்லாம் குற்றம் செய்ய விருப்பப்படுவதாய், அவர்களின் வாழ்க்கையின் முன் சுருக்கம் அமைக்கப் பெற வேண்டும். குற்றவாளிகளில் ஒருவராவது குற்றவாளியாக கணிக்க முடியாதது போல் அமைக்க வேண்டும்.
5. திட்டமிடுங்கள், திட்டமிடுங்கள் நிறைய:
குற்றம் பற்றிய அத்தனை சூழல்களையும், காரணிகளையும், குற்றம் நடந்த விதத்தயும், அதன் தீர்வுகளையும் சரியாக எழுதியிருக்கிறீர்களா என்று உறுதி படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு யாரவது விஷம் கொடுத்திருந்தால், அவ்விஷத்தின் பெயர், தாக்கம், விளைவுகள் பற்றி அனைத்தும் எழுதியிருக்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதலாக, போலீஸ் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா, அல்லது கதாநாயகன் சம்பந்தப் பட்டிருக்கிறாரா என்றும் அதற்குத் தகுந்தது போல கதையின் அடுத்த கட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் நாவலை எழுதத் துவங்கும் முன்னரே மேலே கூரிய அனைத்தையும் முடிவு செய்து கொள்ளுங்கள். குற்றம் என்ன, யார் செய்தார்கள், எதனால், எப்படி என்பதெல்லாம் முடிவு செய்து கொள்ளுங்கள். கதையின் சுருக்கத்தை மனதில் முழுதாக நிருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மனதில் கொண்டு, கதையை எழுதத் துவங்கவும். முடிந்தவரை பொய் திருப்பங்களை யூகங்களாக வடிவமைக்கவும். ஆனால் அது தேவையில்லாத கதைக் குழப்பங்களை உருவாக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
Image credit: Holly Lay on flickr and reproduced under Creative Commons 2.0[author] [author_image timthumb=’on’]https://writingtipsoasis.com/wp-content/uploads/2014/12/photo.jpg[/author_image] [author_info]Georgina Roy wants to live in a world filled with magic.
As a 22-year-old art student, she’s moonlighting as a writer and is content to fill notebooks and sketchbooks with magical creatures and amazing new worlds. When she is not at school, or scribbling away in a notebook, you can usually find her curled up, reading a good urban fantasy novel, or writing on her laptop, trying to create her own.
[/author_info] [/author]